வாழ்க்கையில் வெற்றிபெரும் யுக்தி
சாதனை படைக்கும் சக்தி
உன்னை சிறப்பிக்கும் கருவி
வேரெங்கும் இல்லை நண்பா
கருவிலே உன்
மண்டை ஓட்டுக்குள்
பூட்டப்பட்ட சூட்சுமம்,
அதன் சாவி
உன் மதி,
அங்கு தான்
உன் வாழ்வின்
பரிணாமங்கள் பூட்டப்பட்டுள்ளது
உன்னை உனக்குள்
தேடிப்பார்
உனக்கு நீயே
ஒரு பெரும்
புதையல்
Jan 5, 2010
குமுறல்
தந்தை இட்ட வித்துடன்
தாய் படைத்த மேனியின்
இப்பிறவி கண்ட பயனை
நான் என்று கண்டறிவனோ
மூடர் என்று நீக்கிய
மாந்தர் இன்றெந்தன் முன்
வெற்றி கொண்டு சீண்டினார்
காலம் உன்னை நோவதோ
சித்த சுத்தி தீட்டியே
கற்ற வித்தை யாவையும்
ஒன்று சேர்த்து கட்டுவாய்
நல்ல வித்து காணவே
உலக ஞானம் காட்டிட
வெற்றி என்னும் கிண்ணத்தில்
வல்லமையை ஊட்டி விட
என்ன விலை கேட்கிறாய்
தயார் நிலையில் இருக்கிறேன்
சொக வாழ்வு பொதுமே
சோர்ந்து சோர்ந்து தேய்ந்திட
நானும் மெழகுவத்தியே ஆனால்
ஜொதி மட்டும் இல்லையே
காலம் உன்னை கேட்கிறேன்
என்று விடியல் காட்டுவாய்
நேரம் இங்கு இல்லையே
பொருமை யாவது தந்திடாய்
காம கோப தாபமும்
ஞானம் கொண்டு கட்டியும்
மாயை இன்னும் போகல
இன்னும் என்ன செய்யவோ
தேக நாடி தளர்ந்தபின்
வாள் எடுத்து போரிட
காலம் வைத்த சாபமாய்
நோகடிக்க எண்ணமோ
என்ன என்ன செய்வது
நின்று கொல்லும் தெய்வமும்
எந்தன் கூட இல்லையே.
தாய் படைத்த மேனியின்
இப்பிறவி கண்ட பயனை
நான் என்று கண்டறிவனோ
மூடர் என்று நீக்கிய
மாந்தர் இன்றெந்தன் முன்
வெற்றி கொண்டு சீண்டினார்
காலம் உன்னை நோவதோ
சித்த சுத்தி தீட்டியே
கற்ற வித்தை யாவையும்
ஒன்று சேர்த்து கட்டுவாய்
நல்ல வித்து காணவே
உலக ஞானம் காட்டிட
வெற்றி என்னும் கிண்ணத்தில்
வல்லமையை ஊட்டி விட
என்ன விலை கேட்கிறாய்
தயார் நிலையில் இருக்கிறேன்
சொக வாழ்வு பொதுமே
சோர்ந்து சோர்ந்து தேய்ந்திட
நானும் மெழகுவத்தியே ஆனால்
ஜொதி மட்டும் இல்லையே
காலம் உன்னை கேட்கிறேன்
என்று விடியல் காட்டுவாய்
நேரம் இங்கு இல்லையே
பொருமை யாவது தந்திடாய்
காம கோப தாபமும்
ஞானம் கொண்டு கட்டியும்
மாயை இன்னும் போகல
இன்னும் என்ன செய்யவோ
தேக நாடி தளர்ந்தபின்
வாள் எடுத்து போரிட
காலம் வைத்த சாபமாய்
நோகடிக்க எண்ணமோ
என்ன என்ன செய்வது
நின்று கொல்லும் தெய்வமும்
எந்தன் கூட இல்லையே.
Subscribe to:
Comments (Atom)
